தமிழகத்தில் புதிதாக உருவாகவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு காயிதேமில்லத், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை , இதுகுறித்து அக்கட்சியின்நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாடு முழுவதும் 2021-ம் ஆண்டிற்குள் 72 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்அடிப்படையில் தமிழகத்தில் ஏற்கனவே 4 அரசு மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு 60 சதவீத பங்களிப்பும், மாநில அரசு 40 சதவீத பங்களிப்புடன் இந்த புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு மொத்தம் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில், திருப்பூா், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகா் ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
மேலும் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக தமிழக அரசின் சார்பின் சார்பில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தற்போது கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ கல்லூரியின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே ஆண்டில், ஒன்பது மருத்துவக் கல்லுாரிகள் துவக்க அனுமதி கிடைத்துள்ளதால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 35 ஆக உயர்கிறது; எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 4,950 ஆக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்க அதே வேளையில், புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கையையும் போர்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு, அதற்கான நிதி, நிலம் உள்ளிட்டவைகளை காலதாமதின்றி ஒதுக்கி, 1 ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் புதிதாக நாகப்பட்டினத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு கண்ணிமிகு காயிதே மில்லத் பெயரையும், ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை, இரு பெரும் தலைவர்களை கெளரவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சூட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.