ஐஐடி பட்டமளிப்பு விழா - பிரதமர் மோடி பங்கேற்பு
September 30, 2019
சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு விமான நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
சென்னைக்கு வரும் போதெல்லாம் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 2019 தேர்தலுக்கு பிறகு நான் முதன் முறையாக சென்னைக்கு வந்திருக்கிறேன்.
நான் ஐ.ஐ.டி.யின் நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன். ஆனால் நீங்கள் என்னை வரவேற்பதற்காக பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடி இருக்கிறீர்கள். உங்களுக்கு எனது மகிழ்ச்சியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் அமெரிக்கா சென்று திரும்பி இருக்கிறேன். அமெரிக்காவில் நான் பேசும்போது, தமிழ்மொழி உலகத்திலேயே மிகப் பழமையான மொழி என்பதை நான் அங்கு தெரிவித்தேன். அமெரிக்க ஊடகங்கள் அனைத்திலும் இந்த செய்தி தான் இப்போது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
நான் அமெரிக்காவில் பார்த்த விஷயம் என்னவென்று சொன்னால், இந்தியாவை பற்றி அவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
நாம் நிச்சயமாக நமது நாட்டு நலனுக்காக உழைப்போம். மிக அதிகமாக கடுமையாக உழைப்போம். இருந்தாலும் கூட உலக நன்மைக்காகவும் நான் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை என்னால் பார்க்க முடிந்தது.
இந்த பணியை வெறுமனே டெல்லியில் அமர்ந்து கொண்டு செய்ய முடியாது. நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள், அவர்கள் கிராமத்திலே இருக்கலாம் அல்லது நகரத்திலே இருக்கலாம். அவர்கள் பணக்காரர்களாக இருக்கலாம் அல்லது ஏழையாக இருக்கலாம். அவர்கள் வாலிபர்களாக இருக்கலாம் அல்லது வயோதிகராக இருக்கலாம். 130 கோடி மக்களும் சேர்ந்து செய்ய வேண்டிய பணியாகும்.
இந்த மக்களுடைய ஆதரவோடு நம்முடைய அரசாங்கம் மகத்தான பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பிளாஸ்டிக்கை ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறிகிறோமே, அதை பயன்படுத்துவதை நாம் முதலில் நிறுத்த வேண்டும்.
பலரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், நாம் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதையே நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் அதை சொல்லவில்லை.
ஒருமுறை உபயோகப்படுத்தி நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் மூலமாக மிகப்பெரிய கஷ்டங்கள் ஏற்படுகிறது. ஆகவே அதை நாம் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று தான் சொல்கிறேன்.
காந்திஜியின் 150-வது ஆண்டுவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழாவிலே நாம் அனைவரும், பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம். அந்த பாதயாத்திரையின் மூலமாக இந்த சித்தாந்தங்களை மக்கள் மத்தியில் அடிமட்ட அளவுக்கு எப்படி எடுத்துச்செல்ல வேண்டும் என்று எண்ணி அனைவரும் பணியாற்ற வேண்டும்
என்னைப் பொறுத்தவரை இங்கு கூடி இருப்பவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வி அமைச்சருக்கு நன்றி. ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது. சிங்கப்பூரைப் போல பிற ஆசிய நாடுகளுடன் இணைந்து ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த வேண்டும்.
தமிழர்களின் காலை உணவான இட்லி, தோசை, வடை ஆகிய உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை. தமிழர்களின் விருந்தோம்பல் மிகச்சிறப்பானது. மாபெரும் பாரம்பரியம், மிகச் சிறந்த கலாச்சாரம்கொண்டது சென்னை.
கற்சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரம் மிகவும் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இங்கு வந்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மாமல்லபுரம் சென்று பார்வையிட வேண்டும்.
இந்திய பொருளாதாரம் 5 பிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. புதிய தொழில் நுட்பங்கள் தொழில் முனைவுகளை ஊக்குவிக்க அரசு பல திட்டங்களை கொண்டுள்ளது.
புதிய தொழில் தொடங்குவதற்கு உத்வேகத்தை ஹேக்கத்தான் வழங்கும் என நம்புகிறேன். இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவுபவையாக இருக்கும்.
ஹேக்கத்தான் மூலம் புதிய கேமராவை கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் கூட்டத்தில் யார்- யார் பேச்சை கவனிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும். இதனை நான் பாராளுமன்றத்தில் பொருத்தலாம் என சபாநாயகரிடம் வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார். .
இங்கே என்னை வரவேற்க நீங்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருப்பதற்கு நான் மீண்டும் உங்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோடியின் இந்தி பேச்சை எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து கூறினார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன். வானதி சீனிவாசன் உள்பட ஆயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்றனர்.