தமிழக இளைஞர்களை மிரட்டும் கர்நாடக தனியார் நிறுவன குண்டர்கள்

கர்நாடகவில் உள்ள பெங்களூரில் விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள    யி லி லி என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் இயங்கி வருகிறது இந்த நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் இரத்திஸ் குமார் என்பவர் மேனேஜராக உள்ளார் இவர்.
இந்த ஜேஎல்எல் நிறுவனத்தில் பணிபுரியும் பட்டதாரி இளைஞர்களுக்கு நிறுவன வேலையை தவிர  தன்னுடைய சொந்த வேலைகளையும் பார்க்க சொல்லி வற்புறுத்தி வருகின்றாராம்  இவர் செய்யும் டார்ச்சர் தாங்க முடியாமல் ஏற்கனவே நான்கு  பட்டதாரி இளைஞர்கள் அந்த நிறுவனத்தை விட்டு ஓடி விட்டனர் தற்போது இந்த இரத்தீஸ்குமார்  அவருக்கு கீழ் வேலை செய்யும்  ஜெனித் என்ற பட்டதாரி இளைஞரை தொடர்ந்து டார்ச்சர் செய்தும் உனக்கு பதவி உயர்வு வேண்டும் என்றால் நான்கு லட்சம் ரூபாய் பணம் கொடு என்றும் மிரட்டல் விட்டு வருகிறராம் சமீபத்தில் கடந்த  நவம்பர் மாதம் 8 ம் தேதி ஜேஎல்எல் நிறுவனத்தின் எச்.ஆர் இயக்குனர் சர்வன்முருகன் எச்.ஆர் கார்த்திகேயன் மற்றும் சாய்பிரசாத்  மேனேஜர் இரத்திஸ்குமார் ஆகியோர் தமிழகத்து பட்டதாரி இளைஞர் ஜெனித்தை தனது யூபி சிட்டியில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து கொலை மிரட்டல் விட்டு மரியாதையாக  பணம் கொடு இல்லையென்றால் நீயாக ராஜினாமா செய்து விட்டு ஓடி போயிரு இல்லேன்னா உன்னை ஏதாவது ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவோம்.
 பெங்களூரில் உள்ள போலீஸ் கமிஷனர் நாங்கள் என்ன சொன்னாலும் செய்வார் என்று அந்த அப்பாவி இளைஞர் ஜெனித்திடம் பணமும் வாங்கி கொண்டு கொலை மிரட்டலும் விட்டுள்ளார்கள்  இப்படி இந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பலை வைத்து கொண்டு இந்த யிலிலி நிறுவனம் செயல்பட்டு வருவது அந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர்க்கு விசயமே தெரியாதாம் இப்படி அடாவடி செய்யும் இவர்கள் மீது பெங்களூர் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டதாரி இளைஞர்கள் கர்நாடக மாநில முதல்வர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்